பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகளவான மரண எண்ணிக்கை நேற்று பதிவு
பிரேஸில் மற்றும் இந்தியாவிலும் கொவிட்-19 பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
பிரேஸிலில் நேற்றைய தினம் மாத்திரம் 89 ஆயிரத்து 200 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அந்த நாட்டில் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 27 லட்சத்தை கடந்துள்ளது.
அதேநேரம் பிரேஸிலில் நாள் ஒன்றில் பதிவான அதிகளவான கொவிட்-19 மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.
3 ஆயிரத்து 950 கொவிட்-19 மரணங்கள் அந்த நாட்டில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.
இதன்படி அந்த நாட்டில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக பிரேஸில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரேஸிலுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் நேற்றைய தினம் 72 ஆயிரத்து 182 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அந்த நாட்டில் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 இலட்சத்தை கடந்துள்ளது