பழைய கல்லறைகளை தோண்டி கொரோனா சரீரங்களை அடக்கம் செய்யும் பிரேஸில்
பிரேஸிலில் கொரோனா சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழைய கல்லறைகளை சுத்திகரித்து சரீரங்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கு நாளாந்தம் 75,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதுடன் 3,800க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
அத்துடன், பிரேஸிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் மரணித்தவர்ளை அடக்கம் செய்ய மயானங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், ஏற்கனவே புதைக்கப்பட்டிருக்கும் சரீரங்களின் எச்சங்களை அப்புறப்படுத்தி சரீரங்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன