தேங்காய் எண்ணெய்யில் இரசாயனப் பதார்த்தங்களை கலப்பதற்கு தடைவிதித்து இதுவரையில் வர்த்தமானி வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு

தேங்காய் எண்ணெய்யில் இரசாயனப் பதார்த்தங்களை கலப்பதற்கு தடைவிதித்து இதுவரையில் வர்த்தமானி வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் தெரிவிக்கப்பட்ட வகையில் நுகரப்படும் தேங்காய் எண்ணெய்யில் எந்தவொரு இரசாயனத்தையும் கலப்பதற்கு தடைவிதித்து இதுவரையில் வர்த்தமானி வெளியிடப்படவில்லை என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் பெறப்பட்ட 56 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தமது நிறுவகத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகம் அறிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ராதிகா சமரசேகர இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதுவரையில் தமது தரப்பிற்கு 4 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன் முடிவுகள் நுகர்வோர் அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஃப்லாடொக்ஷின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக முழுமையான தொழிநுட்ப வசதிகள் தமது நிறுவனத்திடம் மாத்திமே உள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்