கொரோனா வைரசு :பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்

கொரோனா வைரசு :பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றுக்கு இலக்காகி குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது.

குணமடைபவர்களின் வீதம் 96.52 ஆக காணப்படுகிறது என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 456 ஆகும்.

அதேவேளை ,இலங்கையில் கொரோனா வைரசு தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 848 ஆக உள்ளது. கொவிட் தொற்றுக் காரணமாக நாட்டில் 595 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

தற்போது வைத்தியசாலைகளில் மருத்துவச்சோதனையிலுள்ளவர்களின் எண்ணிக்கை 316

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2 இரண்டாயிரத்து 797.

கொரோனா வைரசு தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 596.

நாட்டில் 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கிறது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.Vaccine Details