ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல்

ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒன்டாரியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒன்டாரியோவுடன் இனி அதிக வணிகம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் இந்நடவடிக்கை குறித்து யோசிப்பதாக தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா - கனடா இடையே அண்மையில் முறிந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குக் கனடாவின் பிரெஞ்சு மொழித் தேவைகள் குறித்த சர்ச்சை காரணம் என்பதை ட்ரம்ப் மறுத்துள்ளார்.

 

தடம் புரண்ட ஒப்பந்தம்

கனடியரகள் பிரெஞ்சு பேசுவதில் தான் ஒருபோதும் தலையிட மாட்டேன் என்றும், கியூபெக் மக்களின் அரசியல் ஆதரவைப் பெற கனடாவின் பிரதமர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல் | Trump Is Renaming Lake Ontario To Lake America

எனினும், ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனங்கள் கியூபெக்கில் பிரெஞ்சு மொழி உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கனடாவின் சட்டத்தை மாற்றியமைக்குமாறு அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் வற்புறுத்தியதாலேயே ஒப்பந்தம் தடம் புரண்டதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி சுட்டிக்காட்டியிருந்தார்.

தனித்து இயங்கப் போகும் ஒன்டாரியோ

மேலும், ட்ரம்பின் கருத்து குறித்துப் பதிலளித்த கனடாவின் அமெரிக்க வர்த்தகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், அமெரிக்க நிர்வாகத்தின் அன்றாட சமூக ஊடகப் பதிவுகளுக்குக் கனடா அரசாங்கம் பதிலளிக்காது எனக் கூறியுள்ளார்.

ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல் | Trump Is Renaming Lake Ontario To Lake America

இதேவேளை, இது ஒரு வெறும் பேச்சு மட்டுமே எனவும், ஒன்டாரியோ தனித்து இயங்கினால் உலகின் 3ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் என்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.