ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், குடியரசுக் கட்சியினரின் மன உறுதியைக் குலைப்பதற்காக ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

போலி கருத்துக்கணிப்புகள்

இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளால் வெறித்தனமாகச் செயல்படுகின்றனர்.

ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப் | Trump Claim Again Us Is Winning Against Iran

இதற்கு முன் கண்டிராத அளவிற்கு அவர்கள் அவற்றை வெளியிட்டு வருகின்றனர். குடியரசுக் கட்சியினர் வெளியே வந்து வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் மன உறுதி குலைப்பு நடவடிக்கைகள் இவை.

ஆனால், உண்மையான கருத்துக்கணிப்புகள் நமக்கு சாதகமாக மிகச் சிறப்பாக உள்ளன. நமது நாட்டின் மன உறுதியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக வீழ்ச்சியின் விளிம்பில் (Death Spiral) இருக்கும் ஈரான் உட்பட, அனைவருக்கும் எதிராக நாம் வெற்றி பெற்று வருகிறோம்”