டிப்பர் ரக வாகனத்தில் மோதி சைக்கிள் சாரதி பலி! (காணொளி)

டிப்பர் ரக வாகனத்தில் மோதி சைக்கிள் சாரதி பலி! (காணொளி)

மாத்தறை - மிரிஸ்ஸ உடுபில பிரதேசத்தில் இன்று (25) காலை டிப்பர் ரக வாகனத்தில் சைக்கிள் ஒன்று மோதியதில் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மிரிஸ்ஸ - தல்அபர பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினால் உயிரிழந்தவரின் உடல் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை தேடி வெலிகம காவல்துறையினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்