திருகோணமலை ஆபத்தான நிலையில் - ஆளுநர் தகவல்

திருகோணமலை ஆபத்தான நிலையில் - ஆளுநர் தகவல்

திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு இன்றிரவுடன் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அங்கு 56 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இவ்வாறு கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 56 பேரில் அதிகமானவர்கள் திருகோணமலை நகரில் பல இடங்களில் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களாவர்.

அதனால் திருகோணமலை நகர்ப்பகுதியில் மேலும் பலர் கொவிட் நோயுடன் அடையாளங்காணப்படக்கூடும் என மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்