இந்தியாவில் கொரோனா சரீரங்களை தகனம் செய்வதற்கு புதிய இடங்களை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா சரீரங்களை தகனம் செய்வதற்கு புதிய இடங்களை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தல்!

இந்தியாவின் டெல்லி நகரில், கொவிட் நோயினால் உயிரிழக்கின்றவர்களது சரீரங்களை தகனம் செய்வதற்கு, புதிய இடங்களை அடையாளம் காணுமாறு மாநில அரசாங்கம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட் அலையின் தீவிரத்தால், நாளாந்தம் 3000க்கும் அதிகமானவர்கள் மரணிக்கின்றனர்.

நேற்று இந்தியாவில், 3500 பேர் வரையில் மரணித்தநிலையில், அவர்களில் 400க்கும் அதிகமான மரணங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மரணிக்கின்றவர்களை தகனம் செய்வதற்கு போதுமான இடவசிகள் இல்லாதநிலை நிலவுகிறது.

இந்தநிலையில் புதிய இடங்களை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிற்கு தேவையான ஒருதொகை அவசர மருத்துவ பொருட்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், டெல்லியில் இன்னும் மருத்துவ பிராணவாயுவிற்கான பற்றாக்குறை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.