திருகோணமலையில் மறுஅறிவித்தல் வரை அனைத்து கடைகளுக்கும் பூட்டு

திருகோணமலையில் மறுஅறிவித்தல் வரை அனைத்து கடைகளுக்கும் பூட்டு

திருகோணமலை நகர சபையினால் ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து கடைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.

இன்று (02) காலை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தொற்றைக் குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை என்.சீ.வீதி, வடகரை வீதி மற்றும் மூன்றாம் குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.