வாகன விபத்தில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு
கொழும்பு, கண்டி பிராதன வீதியின் கலகெடிஹெனப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியொன்றுடன், உயிரிழந்த காவல்துறை அதிகாரி பயணித்த உந்துருளி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பாரஊர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026