இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்
சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற நீதிக்கான நீள் பயணம் மாநாட்டில் கலந்துக்கொண்டு மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து மேலும் பின்வருமாறு கருத்த வெளியிட்டார்.
“இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில ஆராய்ந்த மார்சுகி தருஸ்மன், யாஸ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ”இங்கு நடந்தது மிகப்பெரிய மனித பேரவலம். இங்கு எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டினர்.
(2010–2011 காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த ஐ.நா. நிபுணர் குழு. அது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவாகும்)
சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை, 2010 அம் ஆண்டு இலங்கையில் வைத்து இவை அனைத்துக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடே எமது தாய்மார்கள் இன்று வரை போராடுகின்றனர். இருந்தும் நீதிக்கான இடத்திற்கு எம்மால் இதுவரை போக முடியவில்லை.
இறுதி யுத்தம் நடைபெறும்போது எமது மக்கள் ஐ.நா அலுவலகம் முன்னால் இருந்து கைகூப்பி இங்கிருந்து செல்ல வேண்டாம் என அழுதார்கள்.
ஆனால் அவர்களை நாட்டில் இருப்பதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விடவில்லை. அன்று தமது உறவுகளை சர்வதேச சமூகம் கைவிட்டதன் காரணத்தினால் பலரை இழந்துள்ளோம்.
இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்தவரே அன்று ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அவர்கள் எங்கள் இழப்புக்களை நய்யாண்டி போக்கில் கையாண்டனர்.
அதுவே இன்று, எந்த ஒரு உள்ளக விசாரணை அலுவலகங்களையம் வேண்டாம் என்றும் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்” என கூறினார்.
சிறீதரன் உரை - 01.30.00