ஜின் கங்கையில் மூழ்கி நபர் ஒருவர் பலி!

ஜின் கங்கையில் மூழ்கி நபர் ஒருவர் பலி!

உடுகம - அலுத்வத்தை பகுதியில், ஜின் கங்கையில் மூழ்கி 32 வயதான ஆண் ஒருவர் பலியானார்.

அனர்த்த முகாமை மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெதுறு ஓயாவின் நான்கு வான்கதவுகளும், குகுலே கங்கையின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, கங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.