தேயிலை மலையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
கம்பளை - புபுரஸ்ஸ தோட்ட பகுதியில் தேயிலை மலையிலிருந்து பெண்ணொருவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கதக்கவர் என்பதுடன் அவர் தொடர்பான விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026