
15 - 30 நிமிடங்களில் கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்!
வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லும் கொரோனா தொற்றாளர்களை 15 - 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.