நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,280 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று இரண்டு இலட்சத்தை கடந்தது.

அதற்கமைய, நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 201,534ஆக உயர்வடைந்துள்ளது.