கொழும்பில் நாளை முதல் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையம் ஆரம்பம்!
நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை உள்ளிட்ட பல நடமாடும் தடுப்பூசி நிலையங்களில், மேல் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள 30 வயதுக்கும் மேற்பட்டோருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை, தியத்த உயன உட்பட மேலும் பல இடங்களில் இந்த நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இதேவேளை, ஏனைய மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.