இன்றைய (ஏப்ரல் 4, 2026) ராசிபலன்; ஆதித்திய மங்கள யோகம் - ராசி வாரியான பலன்கள்!
விசுவாவசு பங்குனி 21-ஆம் நாள் சனிக்கிழமை சந்திரன், இரவும் பகலுமாக துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனிடையே மீன ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனின் சுப சேர்க்கை காணப்படுகிறது. இதனுடன் இன்னும் பிற சுப சேர்க்கையும் காணப்படுகிறது. இன்று காணப்படும் இந்த சுப சேர்க்கைகள் யாருக்கு என்ன பலன் அளிக்கும்? எந்த ராசிக்கு கூடுதல் நன்மை அளிக்கும்? என்பது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்!
ஏப்ரல் 4, 2026 சனிக்கிழமை சிறப்பு தினமான இன்று சந்திரன் துலாம் ராசியில் (சித்திரை நட்சத்திரம்) சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரத்தின் தாக்கம் சூரியனுக்கும் - செவ்வாய் கிரகத்திற்கும் இடையே சிறப்பு தொடர்பை உண்டாக்கி மங்கள ஆதித்திய யோகத்திற்கு காரணமாக அமைகிறது. வேத ஜோதிடத்தில் மங்கள ஆதித்திய யோகம் எனப்படுவது மங்களகரமான ஒரு யோகமாக பார்க்கப்படுகிறது. தனி நபரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் ஒரு யோகமாக கருதப்படுகிறது.
மேஷம் - தொழில் வளர்ச்ச
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி காணும் வாய்ப்பினை இது கொண்டு வரலாம். தொழில் போட்டிகள் குறையும், செய்யும் முதலீடுகளுக்கு அதிகமாகவே வருமானம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களை பக்குவப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும், சித்தாந்த ரீதியாக கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பும் கிடைக்கும். சுருக்கமாக கூறினால், மன அமைதி காணும் ஒரு தினமாக இன்று இருக்கும்.
ரிஷபம் - நிதானம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய ஒரு தினமாக இன்று பார்க்கப்படுகிறது. தேவையற்ற கோபங்களை தவிர்ப்பது நல்லது, வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள்; சிறப்பான பலனை உங்களுக்கு அளிக்கும். குடும்ப பிரச்சனைகளுக்கு முடிவு காணும் வாய்ப்பும் கிடைக்கும். பயண திட்டங்கள், எதிர்பார்த்த நற்செய்தியை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். நம்பிக்கையுடன் இருங்கள்.
மிதுனம் - கருத்து வேறுபாடு
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இன்று தங்கள் உடன் பிறந்தவர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்தியல் ரீதியாக கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். பணியிடத்தில் அலைச்சல் நிறைந்து காணப்படலாம், உங்கள் பணிகளை முடிக்க முடியாது சிரமங்கள் உண்டாகலாம். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள், எதிர்பார்த்த மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வாருங்கள்.
கடகம் - பணிச்சுமை
கடக ராசியில் பிறந்தவர்கள் இன்று தங்கள் பணியிடத்தில் தங்கள் சக்திக்கு மீறிய பணிகளை செய்ய வேண்டி இருக்கும். அலைச்சல் அதிகரித்து காணப்படும், இருப்பினும், வாசிப்பு - கல்வி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மனஸ்தாபங்களுக்கு தீர்வு காணும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஆடை, அலங்காரம், ஒப்பனை தொடர்பான பணிகளை செய்து வரும் நபர்களுக்கும் சிறப்பான ஒரு காலமாக இன்று இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிம்மம் - எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்!
சிம்ம ராசியில் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் விருப்பமான பணிகளை எடுத்து செய்வீர்கள், அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வீர்கள். காதல் வாழ்க்கை / திருமண வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை நீங்கள் கொண்டு வரலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும், கூட்டாண்மையில் செய்து வரும் பணிகள் சிறப்பான பலனை அளிக்கும். பொருளாதார ரீதியாகவும் சிறப்பான ஒரு நாளாக இன்று இருக்கும்.
கன்னி - எச்சரிக்கை!
கன்னி ராசி கொண்டவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக, உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள், குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் கடின உணவுகளை தவிர்த்திடுங்கள். தந்தை வழி ஆரோக்கியம், தாய் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் ஆதரவு உங்களுக்கு இருக்கும், தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் எதிர்பார்த்த திருபத்தை கொண்டு வர முடியும்.
கும்பம் - முன்னேற்றம்
தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பத்தை காணும் ஒரு சிறப்பு தினமாக இன்று இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் சிறு தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம், மருத்துவ செலவுகளை குறைக்கலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளின் வழியே நற்செய்தி ஒன்று உங்களை தேடி வரும். புதிய பணி வாய்ப்புகள் உங்களை தேடி வரும் வாய்ப்பும் காணப்படுகிறது.
விருச்சிகம் - வெற்றி
போட்டி தேர்வுகளில் வெற்றி, ஒரு தலை காதலுக்கு எதிர்பார்த்த பதில் என உங்கள் வாழ்க்கையில் சிறப்பான விஷயங்கள் நடக்கும் ஒரு தினமாக இன்று அமையும். உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். பெற்றோர் வழி ஆதரவு கிடைக்கும், உங்கள் விருப்பமான தொழிலை தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு - நிதானம்
சாகச பிரியர்களான தனுசு ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தினமாக இன்று பார்க்கப்படுகிறது. வாகனம் தொடர்பான தொழில் செய்து வரும் நபர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். காதல் வாழ்க்கை குறித்து பேசுகையில் இன்று சிறப்பான ஒரு தினமாகு உங்களுக்கு இருக்கும். உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்வீர்கள், காதல் திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி பெறுவீர்கள்.
மகரம் - கோபம் கூடாது
மகர ராசியினருக்கு இன்று கலவையான பலன்களை அளிக்கும் ஒரு தினமாக இருக்கும். முடிந்தளவுக்கு உங்கள் கோபத்தை கட்டுப்பாட்டடில் வையுங்கள், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது கூடாது. வியாபாரத்தில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகளை சமாளிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் நபர்களுக்கு சாதகமான ஒரு தினமாகவே இன்று இருக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
துலாம் - தன்னம்பிக்கை
துலாம் ராசியில் பிறந்தவர்கள், துணிச்சலான முடிவுகளை இன்று எடுப்பார்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்கள். கல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான ஒரு தினமாக இருக்கும். வெளியூர் பயணங்கள், எதிர்பார்த்த நற்செய்தியை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும், குல தெய்வ கோயில் வழிபாடு எதிபார்த்த நற்செய்தியை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். குறிப்பாக, திருமண ஆலோசனைகள் வெற்றி காணும்.
மீனம் - மகிழ்ச்சி
மீன ராசியினர் ஜாதகத்தில் தன வீட்டில் காணப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் சேர்க்கை, இன்று அவர்களுக்கு சாதகமான பலன்களை கொண்டு வருகிறது. பல நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், எதிர்வரும் சவால்களை சமாளிக்க மனதளவில் உங்களை பக்குவப்படுத்தும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது கூடாது. தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் விலகும், எதிர்பார்த்த வெற்றியை தேடி தரும். நம்பிக்கையுடன் இருங்கள்!