க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்!
இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள், இன்று (05) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாடசாலை ரீதியான மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.