இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை

இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை

ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யொகோஹாமா நகர மக்களின் கூட்டு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த புதியபேருந்துகள், இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இந்த பேருந்துகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) கலந்து கொண்டு பேருந்துகளை உத்தியோகபூர்வமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்காவிடம் கையளித்தார்.

இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை | Japan Donates Seven Buses To Boost Sri Lanka