13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

அத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும் மகிழுந்து ஒன்றில் பயணித்த வேளை, பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமாக பெறப்பட்டதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.