அடுத்த வாரத்தில் இலங்கைக்கு மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்!
அடுத்த வாரமளவில் மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரையில் மொத்தமாக சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகாிக்கும் என சீனத் தூதரகம் தெரிவத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.
Great encouragement to see #SriLanka administered 337,445 jabs on Tuesday (13), recording the highest inoculation number in a single day👍🙏
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) July 14, 2021
To further support 🇱🇰 #VaccinationDrive , another 2 million #Sinopharm doses will arrive next week, making the total 🇨🇳jabs to 9.1 mln🛬 pic.twitter.com/moGpLsOQGE