நேற்று வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

நேற்று வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

நாட்டில் நேற்றைய நாளில் வீதி விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர்.

உந்துருளிகளில் பயணித்த 7 பேர் இவ்வாறு மரணித்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உந்துருளிகளில் பயணிப்பவர்களும், பாதசாரிகளும் விபத்துக்களுக்கு உள்ளாகின்றமை அதிகரிப்பதால், இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.