தேசிய பொருட்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை
இணையதளத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவிடுவது தொடர்பில் குழு மூலம் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது இன்னும் ஆலோசனை மாத்திரமேயாகும். இதேபோன்று நாட்டின் தேசிய பொருட்களை இணையதளத்தின் ஊடாக சர்வதேசத்திற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் நாட்டிற்கு ஆகக் கூடிய வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவிலான விவசாய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நாட்டிற்குள்ளேயே உற்பத்திசெய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.