நாளொன்றில் அதிகளவான கொவிட் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன!

நாளொன்றில் அதிகளவான கொவிட் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன!

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நேற்றைய தினம் 437,878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

356,628 பேருக்கு சைனோபாம் முதலாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 55,722 பேருக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மொடர்னா முதலாவது தடுப்பூசி 25,240 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று 108 பேருக்கு பைஸர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.