அட்சய திருதியை: இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

அட்சய திருதியை: இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

அட்சய திருதியை நாளான இன்று (30) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 244,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தகவலின் அடிப்படையில் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை: இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் | Gold Rate Today In Sri Lanka

22 கரட் தங்கம் 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.