ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிந்தது!
மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகள் தணிந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவைச் சந்தித்துள்ளன.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.37 டொலர் (1.3 சதவீதம்) குறைந்து 102.91 டொலராகப் பதிவாகியிருந்தது. (04:50 GMT)
வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியதால் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.