அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் சனிக்கிழமையன்று இலங்கைக்கு!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் சனிக்கிழமையன்று இலங்கைக்கு!

ஜப்பானினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி எதிர்வரும் 7 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்படுகின்றன.

முன்னதாக ஜப்பானினால் வழங்கப்பட்ட 7 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டில் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.