காலி நகரின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான புதிய தெரிவாக மாறும் Yazu at the Beach உணவகம்
காலியில் உள்ள பிரபல Radisson Blu Resort ஹோட்டலின் கடற்கரையை அண்மித்து அமைந்துள்ள ‘Yazu at the Beach’ உணவகம், விசேட கொண்டாட்டங்களை மிகவும் நெருக்கமாகவும், மறக்க முடியாத வகையிலும் கொண்டாட விரும்புவோரின் முதன்மைத் தெரிவாக வேகமாக உருவெடுத்து வருகின்றது. இந்தியாவின் புகழ்பெற்ற Yazu வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச கிளையாக இலங்கையில் அண்மையில் கால்பதித்த இந்த பான்-ஆசிய ((Pan-Asian) உணவகம், வழக்கமான கொண்டாட்ட இடங்களைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தேடும் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அலைமோதும் கடலின் எழில் கொஞ்சும் பின்னணி, நாவூறும் சுவையான உணவுகள் மற்றும் பிரத்தியேகமான விருந்தோம்பல் ஆகிய அனைத்தும் ஒருசேர இணையும் ஓர் அற்புதமான இடமாக இது திகழ்கிறது.
நெருக்கமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள், காதல் முன்மொழிவுகள் (Romantic Proposals), நிச்சயதார்த்த விழாக்கள், ஆண்டுவிழாக்கள் அல்லது நிறுவனங்களின் பிரத்தியேகமான கூட்டங்கள் என எதுவாக இருந்தாலும், Yazu at the Beach அதற்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. நேர்த்தியான உட்புற ஆசன வசதிகள், நிழல் சூழ்ந்த கூரைத் தளம் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அழகை ரசித்தபடி கொண்டாடக்கூடிய கடற்கரை வெளி என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், தேவைகளுக்கும் ஏற்ப கொண்டாட்டங்களை நடாத்தக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளன.
Yazu-வின் தனித்துவமான உணவு வகைகளே இக்கொண்டாட்டங்களின் பிரதான சிறப்பம்சமாகும். House of Artisanal Pan-Asian Food என்று அழைக்கப்படும் இந்த உணவகம், உண்மையான ஜப்பானிய, தாய்லாந்து மற்றும் கன்டோனீஸ் (Cantonese) உணவு கலாசாரங்களின் கலவையில் உருவான பிரத்யேக உணவுகள், புதுமையான Cocktail பானங்கள் மற்றும் மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ப பிரத்தியேக உணவுப் பட்டியலைத் (Customized menus) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இங்கு உண்டு.
இது குறித்து Yazu at the Beach நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் பிரத்யுஷ் மொஹபத்ரா கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய காலகட்டத்தில் கொண்டாட்டங்கள் என்பவை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கின்றன என்பதை விட, அவை எவ்வளவு அர்த்தமுள்ள அனுபவங்களைத் தருகின்றன என்பதில்தான் அடங்கியுள்ளன. இலங்கையின் மிக அழகான பின்னணிகளில் ஒன்றில், மக்கள் ஒன்றுகூடி, தங்களின் வாழ்க்கையின் சிறப்புமிக்க தருணங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான ஒரு சிறந்த இடத்தை வழங்குவதே எங்களது நோக்கமாகும்.” என்றார்.
மாலை நேர சூரிய அஸ்தமனக் கூட்டங்கள் முதல் துடிப்பான இரவு நேரக் கொண்டாட்டங்கள் வரை அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் ஏற்ற அதிநவீன சூழலையும், சிறந்த விருந்தோம்பல் சேவையையும் இந்த உணவகம் கொண்டிருக்கிறது. காலி நகரம் ஒரு பிரதான சுற்றுலா மையமாக வளர்ந்து வரும் நிலையில், பிராந்தியத்தின் விருந்தோம்பல் துறைக்கு இது ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.
மேலதிக விபரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு +94 70 748 6486 என்ற இலக்கத்தை அழைக்கவும் அல்லது Yazu at the Beach இன் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை (https://www.instagram.com/yazugalle/) பார்வையிடவும்.