வத்தளையை அண்டிய பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!
வத்தளையில் சில பிரதேசங்களில் நாளை (03) காலை 10 மணி தொடக்கம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வத்தளை - நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலவில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தல வீதி - நாயகந்த சந்தி வரையான அனைத்து கிளை பாதைகளுக்கும் மேற்படி நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அல்விஸ் பிரதேசம், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலபதுவ மற்றும் கெரவலப்பிட்டியின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.