வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகியது.

சந்நிதியான் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றது.

அடியவர்கள் வருகை

செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம் | Thondamanaaru Selvasannidhi Temple Annual Festival

திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர் உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ் வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீர்த்தத் திருவிழாவும் இடம் பெறவுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம் | Thondamanaaru Selvasannidhi Temple Annual Festival