சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு குழு ஸ்தாபிப்பு

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு குழு ஸ்தாபிப்பு

அண்மையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் மலையகம் மட்டும் அன்றி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் தலைமையில் இன்று நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்களாக மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அபிவிருத்தி தொடர்பான குழு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பிரதானிகளுடனும் , காவல் துறை, இராணுவம் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் உள்ளடங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி கருத்து தெரிவிக்கையில் ,

அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக மத்திய மாகாணம் முழுவதும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்தல் மட்டுமல்லாது , அவர்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் இக் குழு ஆளுநரினால் ஸ்தாபிக்க பட்டுள்ளது. மேலும் இக் கூட்டத்தில் உரையாற்றிய பாரத், எமது அமைச்சின் ஊடக பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு ஸ்தாபிக்க பட்டுள்ளது இதன் மூலம் நாம் ஆலோசனைகள் வழங்குவது மாத்திரம் அன்றி தரவுகள் திரட்டும் வேலைத்திட்டத்திலும் உள்ளோம் இதற்க்காக நாம் அவசர தொலைபேசி இலக்கங்களை 0512222422 மற்றும் 0715550666 அறிமுகப்படுத்தி உள்ளோம்.

மேலும் பாடசாலைகளை விட்டு இடை விலகும் மாணவர்களை, ஆண்டுக்கு மலையகத்தில் ஏறத்தாழ 900 மாணவர்கள், இனம் கண்டு மீண்டும் கல்வியினை தொடர வைத்தல் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக இலவசமாக தொழில்முறை கல்வி, இனைய வழி கல்வி போன்ற கல்வி முறை மாத்திரம் அன்றி சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற செயல் முறைகளை நாம் வழங்கி வருகிறோம். மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள் தொடர்பாக விசேட சட்ட மூலத்தையும் நாம் உருவாக்க பரித்துரைத்துள்ளோம் உதாரணமாக ILO C 189 போன்ற சட்டமூலத்தின் மூலம் சட்டங்களை விரிவாக்கல் போன்ற செயன்முறைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார். மேலும் இவ்வாறு குழு ஒன்றை ஸ்தாபித்தமைக்காக ஆளுநர் அவ்ரகளுக்கு நன்றிகளை தெரிவித்தார்

இக்கூட்டத்தில் மாவட்ட அதிபர்கள், திணைக்கள பிரதானிகள் கல்வி அமைச்சின் செயலாளர், சிறுவரை பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனித உரிமை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.