கொவிட்-19 தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த மூன்றாவது நாடாக மாறியது பிரேஸில்!

கொவிட்-19 தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த மூன்றாவது நாடாக மாறியது பிரேஸில்!

பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 30,136பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1008பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒட்டுமொத்தமாக 646,006பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 35,047பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருந்த இத்தாலியை பின்னுக்குத் தள்ளி பிரேஸில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும், 322,307பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 288,652பேர் பூரண குணமடைந்துள்ளனர். 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.