கள்ளக்காதலியை கொலை செய்து புதைத்த காதலன்!

கள்ளக்காதலியை கொலை செய்து புதைத்த காதலன்!

பெண் ஒருவரை ஆயுதமொன்றில் தாக்கி கொலை செய்து குழி தோண்டி புதைத்த சம்பவமொன்று அம்பகஸ்தோவ பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.

பொலிஸிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த 16 ஆம் திகதி அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

36 வயதுடைய கந்தேஎல கொடகும்புர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் உயிரிழந்த பெண்ணுக்கு இடையில் கள்ளக்காதல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதன்போது ஏற்பட்ட தகராறு நீண்டதில் குறித்த கொலை சம்பவம் இடம்​பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த பெண்ணை கொலை செய்து புதைத்த இடத்தை அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.