குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும் நாளில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அன்று மாலை நடைபெறும்.
இதற்கிடையில், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்தது.