கொடூரமாக தாக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட சிறுமி: விசாரணையில் தாய் உள்ளிட்ட இருவர் கைது

கொடூரமாக தாக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட சிறுமி: விசாரணையில் தாய் உள்ளிட்ட இருவர் கைது

கண்டி - வத்தேகம நகரில், நான்கு வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்று நடுவீதியில் விட்டு சென்ற சம்பவம் தொடர்பில் அவரது தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டு சென்ற காட்சி அங்கிருந்த சி சி ரி வி கருவியில் பதிவாகி இருந்தது.

இது குறித்த காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரை இன்று (14.08.2026) கைது செய்துள்ளனர்.

 

காவல்துறை விசாரணை

ஹாலிஎல – கெடவல வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஹாலிஎல காவல்துறையினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடூரமாக தாக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட சிறுமி: விசாரணையில் தாய் உள்ளிட்ட இருவர் கைது | Woman Abandons Four Year Old Girl In Kandy

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் ஹாலிஎல காவல்துறை தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.