நேற்று 380,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நேற்று 380,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் கீழ் நேற்றைய தினம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 91 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் 24,194 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 2 லட்சத்து 54 ஆயிரத்து 794 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

அத்துடன் 6, 577 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
508 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நாட்டில் நேற்றைய தினம் 49 ஆயிரத்து 520 பேருக்கு இரண்டாவது தடவையாக மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 3,020 பேர் பைஸர் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுள்ளதோடு இரண்டாவது தடவையாக 45, 470 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

No photo description available.