அனலைதீவில் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு

அனலைதீவில் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி, அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை துப்பாக்கி, அவற்றுக்கான இரண்டு மகசீன்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை கண்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவற்றினை அடையாளப்படுத்தி, அவற்றினை மீட்பதற்கு அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.