25 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள்

25 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள்

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தான் நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை "BIG FOCUS" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளை முதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை தொடர்பில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்காமை தொடர்பில் எவ்வித மனக்கசப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அன்பான தீர்மானம் ஒன்றை நோக்கி பயணிக்க தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.