
டி20 உலகக் கோப்பை- வங்காளதேசத்துக்கு எதிராக 142 ரன்கள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ்
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கி விளையாடிவருகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஷார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். ராஸ்டன் சேஸ் 39 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மஹதி ஹசன், முஸ்டாபிசுர் ரஹ்மான், சோரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. துவக்க வீரர் முகமது நைம் 17 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வங்காளதேச வீரர்கள் நிதானமாக ஆடினர்.