
IPL போட்டியைக் காண வந்த AK மற்றும் SK
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பை தெரிவு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் இந்த போட்டியைக் கண்டு களிப்பதற்காக நடிகர் அஜித் குமார் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக், மகள் - அனுஷ்கா உடன் வந்துள்ளார்.
அத்துடன் நடிகர் சிவகார்த்திகேயனும் அஜித்துடன் இணைந்து போட்டியைக் கண்டுகளிக்க வந்துள்ளார்.