
உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இன்றைய போட்டிகள்!
உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி, சார்ஜாவில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க எதிர்பார்ப்பதாக அணித் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
சார்ஜா ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளமையே இதற்கு காரணமாகும்.
சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில், வீரர்களிடையே காணப்படும் பலவீனம், இலங்கை அணியின் வெற்றிக்கு தடையாக உள்ளதென கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவுஸ்திரேலியாவுடனான போட்டியில், அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் எடம் ஷம்பா (Adam Zampa), 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில், தென்னாபிரிக்காவின், டப்ரெஸ் ஷம்ஸி (Tabraiz Shamsi), கேஷவ் மஹாராஜ் (Keshav Maharaj) மற்றும் அய்டின் மர்க்ம் (Aiden Markam) ஆகியோரின் சுழல்பந்தை எதிர்கொள்வதன் அடிப்படையில், இலங்கை அணியின் வெற்றி - தோல்வி அமையவுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, டுபாயில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.