இலங்கை அணிக்கு ஓர் அாிய வாய்ப்பு!

இலங்கை அணிக்கு ஓர் அாிய வாய்ப்பு!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளின் பின்னர் இலங்கை அணி 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளது.

இச்சுற்றில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது.

இந்த சுற்றில் குழு 1 இல் போட்டியிடும் இலங்கை அணிக்கு, மேற்கிந்திய தீவுகளுடனான ஒரு போட்டி மாத்திரமே மீதமுள்ளது.

எனினும், இலங்கை அணிக்கு அரை இறுதிக்கு தகுதிபெற மேலுமொரு அரிய வாய்ப்பு காணப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் இலங்கை கட்டாயமாக வெற்றிபெறுமாயின், அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என சர்வதேச கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இப்போட்டியில், இலங்கை அணிக்கு அதிகபட்சமாக 4 புள்ளிகள் கிடைக்கப்பெறும். எனினும், இலங்கை அணிக்கு அரை இறுதிக்கு தகுதிபெற அது போதுமானதல்ல.

இதற்காக, பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளை தோற்கடிப்பது அவசியமாகும்.

இதனைவிட, மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் அதேவேளை, இங்கிலாந்தினால் தென் ஆபிரிக்கா தோற்கடிக்கப்படவேண்டும்.

இவை அனைத்து நிகழுமாயின் ஏனைய அணிகளின் புள்ளிகள் கீழ் நோக்கி செல்ல, இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.

எனினும், இவை அனைத்தும் நிகழ்ந்தால் அதுவொரு அதிசயமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.