
பங்களாதேஷை 6 விக்கெட்டுக்களால் வென்றது தென் ஆபிரிக்கா!
2021 இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற தென்ஆபிரிக்க அணி, தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் 85 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி, 13.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 86 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
இதேவேளை தென் ஆபிரிக்க அணி பங்களாதேஷை தோற்கடித்ததை அடுத்து, இலங்கை அணி உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் அரை இறுதிக்கு தெரிவாவதற்கு காணப்பட்ட இறுதி வாய்ப்பும் இல்லாமல்போயுள்ளது.