மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்சார் மற்றும் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றில் வேகமானது மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
நுவரெலியா மாவட்டத்தை அனர்த்தமற்ற சுற்றுலா வலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.