பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது

பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது

தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டுகளின் சுழற்சியில் 39-ஆவது ஆண்டான விசுவாவசு வருடத்திற்கு விடைகொடுத்து, பராபவ சித்திரை புத்தாண்டு ஆண்டு வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று காலை 8.40 மணிக்கு பிறந்துள்ளது. 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 9 மணி 32 நிமிடத்துக்கு பராபவ வருடம் பிறக்கிறது. 

மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.40 மணிமுதல் மதியம் 12.40 மணிவரையில் கிழக்கு திசை நோக்கி பார்த்து வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். 

திருக்கணித பஞ்ஞாங்கத்தின் படி மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணிமுதல் பகல் 1.32 மணி வரை சந்தர்ப்பம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு நிற கரை வைத்த வௌ்ளை நிற பட்டாடை மற்றும் பவளம் அணிவதும் சிறப்பாகும். 

இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதியில் கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் - திருவாதிரை, புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் ஆகும். 

மலர்ந்துள்ள தித்திக்கும் புத்தாண்டு சகலருக்கும் மகிழ்வான ஆண்டாக அமைய வேண்டும் என அத தெரண குழுமம் பிரார்த்திக்கின்றது.