
திறந்த பல்கலையின் சட்ட நுழைவுப் பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளன - சாணக்கியன் எம்.பி
திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட நுழைவு பரீட்சைக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (14) இடம்பெற்ற இந்தப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதியமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.