
குருப்பெயர்ச்சி அதிர்ஷ்டம்.. இந்த 4 ராசிக்கு எதிர்பாராமல் கிடைக்கபோகும் ராஜயோகம் என்ன?
பலரும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனித்து வருகின்றனர்.
இதனையடுத்து, குருபகவான் பெயர்ச்சியானது வருகிற ஐப்பசி மாதம் 27-ம் திகதியில் மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருந்து அவிட்டம் 2ம் பாதம் கும்ப ராசிக்கு 3ம் பாதம் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். இந்த 4 ராசிக்காரர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தைத் தரும்.
மேஷம்
குருபகவான் கும்ப ராசியில் நுழைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும். மேலும், பதவி உயர்வு கிடைக்கும். பணம் சாதகமாக இருக்கும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எளிதாக முடியும். மொத்தத்தில் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியினர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் மிகவும் சாதகமாகும். பணத் தட்டுப்பாடு முடிவுக்கு வரும். போதிய அளவு பணம் கையில் கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசியினர்களுக்கு எதிர்பாராத பண லாபம் கிடைக்கும். பதவி உயர்வு, மரியாதை பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு நல்ல பலனைத் தரும்.
மகரம்
மகரம் ராசியினர்கள் பணவரவால் ஆதாயம் அடைவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள். தடைபட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.