கண்டியை தோற்கடித்த காலி

கண்டியை தோற்கடித்த காலி

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் கண்டி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காலி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி வொரியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கண்டி அணி சார்ப்பில் அஹமட் ஷெஹ்சாத் அதிகபட்சமாக 56 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் சசிந்து கொலம்பகே அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய காலி கிலெடியேடர்ஸ் அணி 19 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்ப்பில் தனுஷ்க குணதிலக அதிகபட்சமாக 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதற்கமைய, மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று காலி அணி புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது