
ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் தற்போதைய பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளருமான ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தற்போது பங்களாதேஷ் அணியுடன் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பங்களாதேஷ் அணி வீரர்களுக்கோ அல்லது பயிற்சி ஊழியர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.